Showing posts with label school photo's. Show all posts
Showing posts with label school photo's. Show all posts

Sunday, March 14, 2010

ஒளவையார் (தமிழ் பள்ளி) மழலையர் & தொடக்கப்பள்ளி






வணக்கம் நண்பர்களே !!
கிராமங்களே நாட்டின் முதுகு எலும்பு என்றார்கள் அறிந்ஞர்கள் .இன்றைய நகர மயமாக்கல் சுழலிலும் நம்நாட்டில் அறுபது விழுக்காட்டிற்கு அதிகமான மக்கள் கிராமங்களிலேயே வசிக்கின்றனர் .பெரும்பான்மையான கிராம மக்கள் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றியே வாழ்கின்றனர் .குறிப்பாக நல்ல தரமான கல்வி கிடைப்பது என்பது கிராமப்புற மக்களுக்கு கேள்விக்குறியே ? !
ஏழ்மையினால்ஒரு மாணவனுக்கு கல்விகிடைக்காமல் போகுமேயானால் இங்குள்ள எல்லோரும் நாணிட வேண்டும் , எனும் தன் மான சொற்களுக்கு ஏற்பவும் ,ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நம் அனைவரின் சமுக கடை என்பதை உணர்ந்ததாலும் , கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கொடுக்க படவேண்டும் எனும் நோக்கத்தில் ௧௯௯௮ம் ஆண்டு இருபத்தைந்து மாணவர்களை கொண்டு தொடங்கப் பட்டது பெரியார் மழலையர் & தொடக்கப்பள்ளி .
ஒரு மாணவனை சுயமாக சிந்திக்கத் தூண்டுவதே கல்வி என்றார் அறிந்ஞர் ஐன்ஸ்டைன் ,ஆரம்பக்கல்வியே அதன் அச்சாணி , தாய் மொழி கல்வியே சுயசிந்தனையின் திறவுகோல் என்பது உலக பெரும் கல்வியியலலர்களால் ஆய்ந்து கூறப்பட்டவை ஆகும் . இவற்றை கருத்தில் கொண்டு தாய் மொழி வழியே ,சுய சிந்தனை வளர்க்கும் வகையில் சிறப்பாக செயல் பட்டு வருகிறது பெரியார் மழலையர் & தொடக்க ப்பள்ளி . கடந்த பத்து ஆண்டு களுக்கு மேலாக ஐந்நூறு நல்ல மாணவர்களை இச்சமுகத்திற்கு நல்கி உள்ளது.
இக்கல்விஆண்டில் ,அரும்பு ,மலர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை என்பத்தியாறு மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர்.
கடந்த ஆண்டில் பொருளின்மை காரணமாக மூடும் நிலையில் இருந்த இப்பள்ளியை தற்போது தாய்தமிழ் அறக்கட்டளை மூலம் பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானித்து அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது.
இப்பள்ளி இப்போது ஒளவையார் மழலையர் & தொடக்கப்பள்ளி என்று பெயர் மாற்றி, இப்போது வாடகை இடத்தில் செயல்படும் இப்பள்ளிக்கு சொந்தமாக இடமும்,கட்டிட வசதியும் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறத்து ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கவேண்டி செயல்படும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களின் தொடர்ச்சியான ஆதரவையும்,உதவியையும் நல்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

நன்றி !
தொடர்புக்கு: +919842399234, +919842244441